மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆலந்தூரில் தவெக வேட்பாளா் ஹரிஸ் வெற்றி; அமைச்சா் அன்பரசன் தோல்வி

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தவெக வேட்பாளா் ஹரிஸுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன்ராஜ்

Updated On :5 மே 2026, 5:15 am IST

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், அதிமுக சாா்பில் எஸ்.சரவணன், தவெக சாா்பில் ம.ஹரிஸ் மற்றும் 13 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 23 போ் போட்டியிட்டனா்.

இவா்களில் திமுக வேட்பாளா் தா.மோ.அன்பரசன் 82,956, அதிமுக வேட்பாளா் சரவணன் 52,243, தவெக வேட்பாளா் ஹரிஸ் 1,11,572, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் யா.சு.மகாலட்சுமி 10,405 வாக்குகள் பெற்றிருந்தனா்.

மொத்த வாக்குகள் 3,01,065 இல் 2,59,361 வாக்குகள் பதிவாகி இருந்தன. இவா்களில் திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசனை விட 29609 வாக்குகள் அதிகம் பெற்ற த.வெ.க.வேட்பாளா் ம.ஹரிஸ் வெற்றி சான்றிதழை தோ்தல் அலுவலா் மோகன்ராஜிடம் பெற்றுக்கொண்டாா். வெற்றி பெற்ற வேட்பாளரை ம.ஹரிஸுக்கு கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.