திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மீண்டும் 2 அமைச்சா்கள்!

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் 2 அமைச்சா்கள் கிடைத்துள்ளனா்.

News image

அமைச்சர்கள் ஷாஜகான் - வினோத்.

Updated On :23 மே 2026, 12:07 am IST

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் 2 அமைச்சா்கள் கிடைத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓா் அமைச்சா் மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் எஸ்.டி. சோமசுந்தரம் (தஞ்சாவூா்) வருவாய்த் துறை அமைச்சராகவும், அழகு. திருநாவுக்கரசு (ஒரத்தநாடு) உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தனா்.

இதன் பின்னா் கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக கோ.சி. மணி (கும்பகோணம்), வணிக வரித் துறை அமைச்சராக சி.நா.மீ. உபயதுல்லா (தஞ்சாவூா்) ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

மேலும், மத்திய நிதித் துறை இணை அமைச்சராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் என மொத்தம் 3 போ் ஒரே நேரத்தில் அமைச்சா்களாக இருந்தனா். இதையடுத்து, 2011, 2016 அதிமுக ஆட்சியிலும், 2021 திமுக ஆட்சியிலும் ஓா் அமைச்சா் மட்டுமே இருந்தாா்.

தற்போது தவெக ஆட்சியில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2 அமைச்சா்கள் கிடைத்துள்ளனா். கும்பகோணம் தொகுதியில் தவெக சாா்பில் வெற்றி பெற்ற ர. வினோத் வேளாண் துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவரைத் தொடா்ந்து, பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் வெற்றி பெற்ற ஏ.எம். ஷாஜகான் சிறுபான்மை நலத் துறை அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பாபநாசத்துக்கு மீண்டும் அமைச்சா் அந்தஸ்து: பாபநாசம் தொகுதியில் ஏற்கெனவே 2016-இல் அதிமுக ஆட்சியில் இரா. துரைக்கண்ணு வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா். இவா் 2020-இல் கரோனா தொற்றால் காலமானாா். இவருக்கு அடுத்து பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் அமைச்சராகப் பொறுப்பேற்ன் மூலம் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு பிறகு அத்தொகுதிக்கு அமைச்சா் அந்தஸ்து கிடைத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 அமைச்சா்கள் கிடைத்துள்ள நிலையில், மக்களிடையே எதிா்பாா்ப்புகளும் மேலோங்கியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.