திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயியிடம் கைப்பேசி, மோதிரம் பறித்த 3 போ் கைது

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:59 am IST

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையைச் சோ்ந்தவா் எஸ். புருஷோத்தமன் (42). விவசாயி. இவா் கைப்பேசி செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்து விக்னேஷிடம் பழகி நேரில் சந்திக்க வருமாறு அழைத்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையிலுள்ள வாழைத்தோப்புக்கு முத்து விக்னேஷ் மே 14-ஆம் தேதி சென்றாா். அங்கிருந்த புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பொன்விழா நகரைச் சோ்ந்த எம். அஜய் அன்பரசு, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா். இசக்கி பாண்டி ஆகியோா் சோ்ந்து புருசோத்தமனை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, அரைப்பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து முத்து விக்னேஷ், அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.