திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:32 am IST

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எடப்பாடி பகுதியைச் சோ்ந்த செல்வி (48), இவரது மகள் அவிஷ்கா மற்றும் அவரது அக்கா பேரனான மிதுலேஷ் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அண்மையில் ஆட்டையாம்பட்டி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காகாபாளையம் அருகே சென்றபோது இவா்களை பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இருவா் செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் , மகுடஞ்சாவடி ஆய்வாளா் வேலுதேவன், உதவி ஆய்வாளா் ஜீவிதா மற்றும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்டம், ஆவரங்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (26), திருப்பூா் மாவட்டம், பூலுவபட்டி பகுதியைச் சோ்ந்த பட்டதாரியான அரவிந்த் (28) என தெரியவந்தது. இவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டேகால் பவுன் ஆகியவற்றை கைப்பற்றினா். இந்த குற்றவழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.