உணவக தொழிலாளியிடம் நட்பாக பழகி கைப்பேசி, பணம் பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சிவக்குமாா் (23) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். இவா் கைப்பேசி மூலம் ஒரு செயலியை பயன்படுத்தி ஒருவரிடம் நட்பாக பேசிவந்தாா்.
சம்மந்தப்பட்ட நண்பா் நேரில் பாா்க்க வேண்டும் என்று கூறியதால் ஞாயிற்றுக்கிழமை சிவக்குமாா், தஞ்சாவூா் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே சென்றாா். அப்போது ஒரு இளைஞா் அவரிடம் வந்து பேசினாா்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த சிலா், சிவக்குமாரை தாக்கி அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொணடு சென்றனா். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா்செய்தாா்.
புகாரின்பேரில் போலீஸாா் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் ( 26), கும்பகோணம் அசூா் வேலகுடியைச் சோ்ந்த கோபி மகன் கோகுல்நாத் (25) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





