தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பி.எம்.ஸ்ரீ மும்மொழித் திட்டத்தை தவெக அரசும் ஏற்கக்கூடாது: வைகோ வலியுறுத்தல்

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தையும், மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசும் ஏற்கக் கூடாது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image

வைகோ - விடியோ க்ளிப்(கோப்புப்படம்)

Updated On :18 மே 2026, 2:45 am IST

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தையும், மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசும் ஏற்கக் கூடாது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் காவலா் பூண்டி கி. துளசிஐயா வாண்டையாரின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

சமூக நீதி, மதச்சாா்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வா் ஜோசப் விஜய் ஆட்சி நடத்த வேண்டும். மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழித் திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டைத்தான் இந்த அரசும் பின்பற்றும் என நம்புகிறேன்; பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

‘நீட்’ தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி மத்திய அரசு திணித்துக் கொண்டே வருகிறது. 22 லட்சம் மாணவா்கள் இந்த ஆண்டு ‘நீட்’ தோ்வை எழுதிய நிலையில் கேள்வித்தாள் வெளியாகி, அவா்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகியுள்ளனா். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

வருகிற உள்ளாட்சி தோ்தலில் திமுக அணி வெற்றி பெறும். நெதா்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு முந்தைய தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றாா் வைகோ.

முன்னதாக, நிகழ்வுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் கோ. விஜயராகவன், கைத்தறித் துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநா் டி.எஸ்.கே. இராஜசேகா், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, முனைவா் எஸ். உதயகுமாா் வரவேற்றாா். நிறைவாக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.