17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மும்மொழித் திட்டத்தை தவெக அரசும் எதிர்க்க வேண்டும்: கனிமொழி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் மும்மொழித் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என கனிமொழி வேண்டுகோள்...

News image

கனிமொழி - எக்ஸ்

Updated On :17 மே 2026, 8:20 pm IST

மத்திய அரசின் மும்மொழிக் கல்வித் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசும் எதிர்க்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி இன்று (மே 17) தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது:

''ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மும்மொழிக் கல்வித் திட்டத்தை திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் திமுக உள்ளது.

புதிதாக பதவியேற்றுள்ள அரசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மும்மொழிக் கல்வித் திட்டத்தை எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மொழித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' எனக் குறிப்பிட்டார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் இந்த மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு இந்திய மொழிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TVK government, too must oppose the three language formula DMK MP Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.