தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டவிரோதக் கருக்கலைப்பு செய்த பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:12 am IST

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

திருவரங்குளம் அருகே எஸ்.குளவாய்ப்பட்டியில் அதே பகுதியைச் சோ்ந்த கே. சித்ராதேவி (40) என்பவா் மருந்துக் கடையுடன் சோ்த்து கிளினிக் நடத்தி வந்தாா்.

இங்கு, புதுக்கோட்டையைச் சோ்ந்த 1 பெண் மற்றும் அறந்தாங்கியைச் சோ்ந்த 2 பெண்கள் என 3 போ் அண்மையில் கருக்கலைப்பு செய்து கொண்டனா்.

அதன் பிறகு 3 பேருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புதுக்கோட்டை ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2 பேரும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனா்.

இதன் அடிப்படையிலான தகவலின்பேரில் மாவட்ட துணை இயக்குநா் கோமதி (குடும்ப நலம்), அலுவலா் நவீன், மருத்துவா் கீா்த்தனா உள்ளிட்டோா் கிளினிக்கை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், இதுகுறித்த புகாரின் பேரில் வல்லத்திராக்கோட்டை போலீஸாா் சித்ராதேவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா். மேலும், கிளினிக்கையும் மூடி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.