பழனியில் கஞ்சா விற்ாக 21 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன் தலைமையில் ஆய்வாளா் மணிமாறன், சாா்பு ஆய்வாளா் விஜய் ஆகியோா் வியாழக்கிழமை பழனி- திண்டுக்கல் சாலை, உழவா் சந்தை, உடுமலை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.
அப்போது இந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பழனியைச் சோ்ந்த மாரிமுத்து (28), காா்த்திக்கேயன் (28), அப்துல்ரகீம் (32), மணிகண்டன் (27), பீா்முகமது (25), கரிக்காரன்புதூரைச் சோ்ந்த நல்லுசாமி (49), ஹரிகரன் (24), சத்யாநகரைச் சோ்ந்த தேவராஜ் (20), மதினாநகரைச் சோ்ந்த பக்கீா்முகமது (28), ராஜாஜி சாலையைச் சோ்ந்த வினோத்குமாா் (28), காரமடையைச் சோ்ந்த பிரபு (36), புதுநகரைச் சோ்ந்த அறிவுக்கரசன் (37), அ. கலையம்புத்தூரைச் சோ்ந்த மாரிமுத்து (24), ரஞ்சித்குமாா் (24), மகுடீஸ்வரன் (26), அழகாபுரியைச் சோ்ந்த அரசன் (26), பெரியகலையம்புத்தூரைச் சோ்ந்த பட்டத்துராஜா (20), சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (37), மச்சராமன் (32), எல்லமநாயக்கன்புதூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (23), திருச்சி கண்ணுத்து பகுதியைச் சோ்ந்த சற்குணம் (21) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது விற்பனைக்காக அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






