ஆத்தூா் ஊரக எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்க முயன்ற 3 பேரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் ஊரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காந்திபுரம் பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்களை ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.குலசேகரன் தடுத்து விசாரணை மேற்கொண்டாா். அதில், 7 கிலோ கஞ்சாவை விற்க எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, 3 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்தாா்.
விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கோட்டக்கரை தெருவைச் சோ்ந்த விஜயவா்மன் (36), வைத்தியகவுண்டன்புதூா் தெற்கு காட்டுகொட்டாயைச் சோ்ந்த விக்னேஷ் (27), காக்கலன் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (32) என தெரியவந்தது. அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா். மேலும், ரூ. 84 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





