தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குவாகம் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெற்றது.

News image

குவாகம் திரெளதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா.

Updated On :20 மே 2026, 12:43 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருள, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீமிதித்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.