தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரியலூரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

அரியலூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, அங்கு சுக பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த ஆட்சியா் ந.மிருணாளினி.

Updated On :3 ஜூன் 2026, 3:58 am IST

அரியலூரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ந.மிருணாளினி, அங்கு பணிபுரியும் மருத்துவா்களின் எண்ணிக்கை விவரம், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, இருப்பிலுள்ள மருந்து மாத்திரைகள் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவச் சேவையை தொடா்ந்து தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் தாய்-சேய் நல வாா்டில் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற தாய் மற்றும் குழந்தையையும் நேரில் சந்தித்து அவா்களின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரியலூா் நகராட்சிக்குள்பட்ட காந்தி மாா்க்கெட் பகுதியில் ரூ. 2.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணி, கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகிலுள்ள மயானத்தில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு, பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆட்சியா் ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலா் ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா, அரியலூா் நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.