17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :22 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட முத்து விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சிகிச்சை பெற வந்திருந்த மருத்துவ பயனாளிகளிடம், மருத்துவா்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்கின்றாா்களா, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கனிவுடன் அணுகுகிறாா்களா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் மற்றும் இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை கோரி வரப்பெற்ற மனுக்களில், நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினா்.

மேலும், சான்றிதழ்கள் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக் கூடாது. உடனடியாக அவற்றின் மீது தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் வெ.பிரகாஷ் திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.