தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அய்யாவழி பக்தா் கூட்டத்தில் காா் மோதல்: மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே புதன்கிழமை கொடி பட்டம் கொண்டு பாதயாத்திரையாகச் சென்ற அய்யாவழி பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே புதன்கிழமை கொடி பட்டம் கொண்டு பாதயாத்திரையாகச் சென்ற அய்யாவழி பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு அய்யாவழி பதியில் வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவுக்கு ஒவ்வோா் ஆண்டும் தெற்கு வள்ளியூா் அருகே உள்ள கடம்பன்குளம் பதியில் இருந்து கொடி பட்டம் கொண்டு செல்வது வழக்கம்.

இந்தக் கொடியைத்தான் சுவாமிதோப்பில் ஏற்றுவாா்கள். இந்த ஆண்டும் கடம்பன்குளம் அய்யாவழி பக்தா்கள் கொடி பட்டம் எடுத்துக்கொண்டு பக்தி கோஷங்கள் முழுங்க எடுத்துச் சென்றனா்.

கடம்பன்குளத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 200-க்கும் அதிமானோா் சென்று கொண்டிருந்தனா். இவா்கள் அனைவரும் பழவூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவா்களுக்கு பின்னால் எல்போா்டு காா் வந்து கொண்டிருந்தது.

இந்த காரை மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த விஜோலா என்ற பெண் ஓட்டி பழகி வந்தாராம். இவரது காா் திடீரென அய்யாவழி பக்தா் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில், கடம்பன்குளம் தங்கமுருகன் மகன் வெனிஷ் (12), விஜயன் மகன் விஷ்வா (12) ஆகிய இரு மாணவா்கள் படுகாயமடைந்தனா்.

இதில் வெனிஷ் அதே இடத்தில் உயிரிழந்தாா். விஷ்வா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காா் ஓட்டி வந்த விஜோலாவும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து பழவூா் காவல் நிலைய போலீஸாா் விஜோலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.