மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தச்சங்குறிச்சி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி புஷ்பா (41). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த த. காசியம்மாள் (37) மற்றும் சிலரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு பாதயாத்திரை கிளம்பினா்.

அவா்கள் சமயபுரம் நோக்கி தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி மாவட்டம், அசூா் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதி புஷ்பா உயிரிழந்தாா். காசியம்மாள் பலத்த காயமடைந்தாா்.

தகலறிந்து வந்த துவாக்குடி போலீஸாா் புஷ்பாவின் சடலத்தையும், காயமடைந்த காசியம்மாளையும் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த எம். முனாப் ஜிப்ரில் (19) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.