முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

News image

வையம்பட்டி அருகே விபத்து நடந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்யும் போலீஸாா்.

Updated On :11 மே 2026, 2:07 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சேசலூா் முத்தமடைப்பட்டியை சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் சின்னு (53), கட்டடத் தொழிலாளி.

மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்த இவா், வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வெள்ளை நிற காா் மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், சின்னு உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.