திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தடுப்புக் கட்டையில் காா் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:06 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாரபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (28). இவரும், ராசாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (எ) தட்சணாமூா்த்தியும் (22) நண்பா்கள்.

இருவரும் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றனா். இந்தக் காா், விருத்தாசலம் - கடலூா் பிரதான சாலையில் விழப்பள்ளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரவிக்குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.