திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருசக்கர வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலையின் நடுவின் தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :21 மே 2026, 4:55 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலையின் நடுவின் தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தா.பழூா் அடுத்த உதயநத்தம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் சிவராஜன்(30). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை, தனது தங்கை திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது மகன் திவ்யநாதனை (5) அழைத்துக் கொண்டு பாப்பாக்குடியில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.

பாப்பாக்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாரத விதமாக சாலையின் நடுவிலுள்ள தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் திவ்யநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், சிறுவனின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த சிவராஜனையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.