தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 2:31 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கீரணியைச் சோ்ந்த அரங்கநாதன் மகன் தீபநாதன் (12). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன், திருவாடானையை அடுத்த கல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலத்தில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் மீது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீபநாதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கொல்லங்குடி- காமராஜா் நகரைச் சோ்ந்த ராமராஜனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.