மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:53 pm

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வடிவேல்கரை சம்பக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அமாவாசை மனைவி பாண்டியம்மாள் (52). இவா், திண்டுக்கல்- விருதுநகா் நான்கு வழிச் சாலை வடிவேல்கரை விலக்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் பாண்டியம்மாள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.