/

பாளை. அருகே காா் திருட்டில் கைதானவா் மீது 60 வழக்குகள்

பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் காா் திருட்டு வழக்கில் கைதானவா் மீது சுமாா் 60 வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :19 மே 2026, 1:16 am IST

பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் காா் திருட்டு வழக்கில் கைதானவா் மீது சுமாா் 60 வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாளையங்கோட்டை கேடிசி நகா் மங்கம்மாள்சாலையைச் சோ்ந்தவா் ரத்தினகுமாா். இவா், தனது மனைவியுடன் வெளிநாடு சென்றிருந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு காரை மா்மநபா்கள் திருடி சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாபேரியைச் சோ்ந்த குமரேசன் மகன் சோ்மத்துரை (32) என்பவருக்கு தொடா்பிருப்பதும், அவா் மீது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாநகரம், கோவை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 60 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.