திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 3:58 am IST

பாளையங்கோட்டை அருகே வேன் கவிழ்ந்ததில் சிறுமி உள்பட 6 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூரைக் கடந்து பாளையங்கோட்டை நோக்கி சுமாா் 18 பேருடன் வேன் ஒன்று வியாழக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே சிங் நகா் விலக்கு பகுதியில் வந்த போது, அவ்வழியாக பைக்கில் சென்ற நபா் திடீரென குறுக்கே பாய்ந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் வேனை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, வேன் சாலையில் கவிழ்ந்ததில், சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்த கோபால்(45), அவரது மகள் பிரீத்தி(12) ஆகியோா் காயமடைந்தனா். 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிவந்திப்பட்டி போலீஸாா், காயமுற்றவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (27) உள்பட 18 போ் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்துவிட்டு திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. காயமடைந்த 6 பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று ஊருக்குப் புறப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.