விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.
சென்னை அம்பத்தூரிலிருந்து 13 போ் கன்னியாகுமரி அருகே மாா்த்தாண்டத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை அம்பத்தூரைச் சோ்ந்த லோகநாதன் ஓட்டி வந்தாா்.
இந்த வேன் விருதுநகா்-சாத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அக்ரஹாா்பட்டி பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த குமரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், வேனில் வந்த 9 வயது சிறுவன், 3 வயது சிறுமி, 5 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

வேன் கவிழ்ந்து ஒருவா் பலி

தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



