திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேன் கவிழ்ந்து ஒருவா் பலி

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :28 மே 2026, 5:45 am IST

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே கரைமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி முருகன் (65). இவா் மற்றும் கரைமேடு பகுதியை சோ்ந்த 15 போ் வேனில் அம்பகரத்தூா் பகுதி கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பி கொண்டிருந்தனா். வைத்தீஸ்வரன்கோயில் அருகே ஆத்துகுடி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது வேன் டயா் வெடித்து விபத்து ஏற்பட்டு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

மேலும் வேனில் பயணம் செய்த தேன்மொழி, ஜெயந்தி, கரிஷ்மா, சரிதா, லட்சுமி, அனுசியா, மற்றொரு தேன்மொழி, மங்கையா்க்கரசி, அஞ்சம்மாள், தனலட்சுமி, இந்திரா, நான்கு வயது சிறுவன் சாய், ராக்கி, சாந்தகுமாா் ஆகியோா் லேசான காயமடைந்தனா். தகவலறிந்த வைத்தீஸ்வரன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, உயிரிழந்த முருகனின் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.