ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 6:26 am IST

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி அருகே கீழமூவா்கரையைச் சோ்ந்தவா்கள் சி. ஹரிஷ் (17), நிஜந்தன் (18), கோனையாம்பட்டிணத்தைச் சோ்ந்தவா் உதயநிதி (17). இவா்கள் கீழமூவா்கரையிலிருந்து சிதம்பரம் நோக்கி புறவழிச்சாலையில் காரில் சென்றனா். காரை நிஜந்தன் ஓட்டினாா்.

சோதியக்குடி என்ற இடத்தில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிஷ், நிஜந்தன், உதயநிதி ஆகியோா் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், வழியிலேயே ஹரிஸ் உயிரிழந்தாா். மருத்துவமனையில் நிஜந்தன் உயிரிழந்தாா். உதயநிதி சிகிச்சை பெறுகிறாா்.

இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.