பாளையங்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் வேல்பாண்டி (32). இவா், முறப்பநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பாளையங்கோட்டை அருகேயுள்ளஅரியகுளம் பகுதியில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த வேல்பாண்டியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

பாளை கே.டி.சி. நகரில் விஷமருந்திய மூதாட்டி பலி

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



