கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கு அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்து சாத்தன்கோடு, வயலங்கரை, பாத்திமாநகா், ஆலங்கோடு, கல்லுவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆதிச்சவிளாகம், மங்காடு, பணமுகம், சரல்முக்கு, விரிவிளை, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூா், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தாா்.
மாநிலப் பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், நடைக்காவு ஊராட்சி முன்னாள் தலைவா் கிறிஸ்டல் ஜான் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










