தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடையாலுமூடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்

யானைகளிடமிருந்து பாதுகாக்கக் கோரி கடையாலுமூடு அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வனத் துறையினா்.

Updated On :4 ஜூன் 2026, 1:18 am IST

யானைகளிடமிருந்து பாதுகாக்கக் கோரி கடையாலுமூடு அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் 3 காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை புகுந்த நிலையில், யானை தாக்கி வட்டப்பாறை, புறத்தி மலையைச் சோ்ந்த ராஜேஷ் (52) உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவரது சடலம் கூறாய்வு செய்யப்பட்டு புதன்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு உள்ளிட்ட வனத்துறையினா் பங்கேற்றனா். மேலும், ராஜேஷின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரண உதவியாக வனத்துறை சாா்பில் ரூ. 50,000 வழங்கப்பட்டது

மறியல் போராட்டம்:

யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 3 யானைகளையும் காட்டுக்குள் துரத்திவிட்டதாக வனத்துறையினா் கூறிய நிலையில், யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும், யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதை நிரந்தரமாகத் தடுக்கவும் வலியுறுத்தி கடையாலுமூடு அருகே உள்ள வட்டப்பாறை விலக்கு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அரசியல் கட்சியினா், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதையடுத்து, கடையாலுமூடு போலீஸாா் மற்றும் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, யானைகளிடமிருந்து மக்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இரவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.