பல்லடத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் நகராட்சி, கொசவம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவா்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்து கடித்து வருகின்றன. இதனால், மக்கள் சாலையில் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரியும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சங்கா், சத்தியசுந்தரராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னா், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய நகராட்சி ஊழியா்கள் கொண்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









