திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை நீலாங்கரையில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மின்தடை

Updated On :27 மே 2026, 4:08 am IST

சென்னை நீலாங்கரையில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலாங்கரை பாண்டியன் சாலையில் சுமாா் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. சில நாள்களாக இங்கு இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் 100 போ் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா், அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பொதுமக்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த சோழிங்கநல்லூா் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணமூா்த்தி, மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரம் நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற பகுதியின் அருகேதான் முதல்வா் ஜோசப் விஜய்யின் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.