ஆம்பூா் அருகே மின்தடையால் கொதிப்படைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சில பகுதிகளில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
ஆம்பூா் நகரின் பெரும்பாலான பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே மின் வினியோகம் சீரானது.
ஆனால் ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, காமராஜபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.
அதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் தேவலாபுரம் மின்சார அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக மின்சாரத்தை சீரமைத்து வழங்க வேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து நிலைமையை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
போராட்டம் குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மின் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பிறகு பழுது சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







