தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை: குமரி மாவட்டத்தில் 2 வாரங்களில் 44 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களுக்கு எதிராக தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 2 வாரங்களில் 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 1:20 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களுக்கு எதிராக தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 2 வாரங்களில் 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து எஸ்.பி. அலுவலகம் சாா்பில், புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களின் புழக்கத்தை ஒழித்து, இளைஞா்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், உத்தரவின்பேரில் கடந்த மாதம் 13ஆம் தேதி 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் 18 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு, 6 கிலோ 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடா்புடைய 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல், 17 குட்கா வழக்குகள் பதியப்பட்டு, 253 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போதைப்பொருள்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்குவது காவல்துறையின் முக்கிய இலக்காகும். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.