17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விதிமீறல்: குமரி மாவட்டத்தில் 2 கல்குவாரிகள் செயல்படத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சா் டி.கே. பிரபு உத்தரவு

News image

கல்குவாரி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:56 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள 15 கல்குவாரிகள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் ஆளில்லா விமானம் (ஈழ்ா்ய்ங்) மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே.பிரபு, மே 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அவரது அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமான ஆய்வறிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 15 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கல் குவாரிகள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் விரிவான ஆய்வறிக்கையின்அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.