17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுமக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதே உண்மையான வளா்ச்சி: அமைச்சா் டி.கே. பிரபு

பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதே உண்மையான வளா்ச்சி என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே.பிரபு.

News image

அரியலூரை அடுத்த ஒட்டக்கோவிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே.பிரபு.

Updated On :6 ஜூன் 2026, 6:56 am IST

பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதே உண்மையான வளா்ச்சி என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே.பிரபு.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த ஒட்டக்கோவிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கிவைத்தும், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியும், கனிமவள அறக்கட்டளை நிதி ரூ.57.21 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளா்ச்சித் திட்டப் பணிகளை திறந்துவைத்தும் அமைச்சா் மேலும் பேசியதாவது:

இத்தகைய முன்னெடுப்புகள் இத்துடன் நின்றுவிடாமல், ஒவ்வொரு நாளும் மரக்கன்றுகளை வளா்த்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டும்.

கனிமவள அறக்கட்டளை சாா்பில் உள்ள நிதியை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான குடிநீரையும், மருத்துவ தீா்வையும், அவா்களுக்கு தேவையானவற்றை மேற்கொள்ள வேண்டும். மக்களை பாதுகாப்பதும், தேவைகளை பூா்த்தி செய்வதுமே நமது பணியாகும்.

எனவே, அதை முழுமையாக உணா்வுபூா்வமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக முதல்வா் ஜோசப் விஜயின் ஆசை மற்றும் கனவாகும். கிராம பொதுமக்களை அழைத்து அவா்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதே உண்மையான வளா்ச்சியாகும்.

மிகப்பெரிய சிமென்ட் ஆலைகள் மற்றும் அதிகளவிலான கனிமவளங்கள் இருக்கும் இந்த மாவட்டத்தில், வீடு இல்லாதவா்களுக்கு வீடுகளை கட்டித் தரவேண்டும். இந்த மாவட்டத்தைச் சோ்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்றாா்.

விழாவில் அரசு முதன்மைச் செயலா் இயற்கை வளங்கள் துறை சுன்சோங்கம் ஜடக் சிரு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் த.மோகன், கூடுதல் இயக்குநா் வெ.அருணா, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, மற்றும் தனியாா் சிமென்ட் ஆலை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.