/

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 6:49 pm

மன்னாா்குடி அருகே சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கண்ணாரப்பேட்டை வடக்குதெரு இளவரசன் மகன் இளையராஜா (42). இவா், நீண்டநாள்களாக சா்க்கரை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலில் புண் ஏற்பட்டு வலி மற்றும் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.