மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!

மே 2 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதற்கு நடிகர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு அழைப்பிதழ் / நடிகர் சங்க லச்சினை - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 2:42 pm

மே 2 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதற்கு நடிகர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறைக்கு ஆதரவு இல்லை என்றும், நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பில் இருந்து இதுவரை கடிதமோ மின்னஞ்சலோ வரவில்லை எனவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று (ஏப். 26) நடை​பெற்​றது.

இக்கூட்டத்தில், சிறிய முதலீட்​டில் தயாரிக்​கப்​படும் படங்​களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மானியத் தொகையை புதிதாக பொறுப்பேற்கும் தமிழ்​நாடு அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் சினி​மா துறை​யில் உள்ள அனைவரின் கவனத்​துக்​குக் கொண்டு சேர்க்​கும் வகை​யில், ஒரு​ நாள் அடையாள வேலை நிறுத்​தம் செய்​ய​ தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகர் சங்​கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்​கு​மா​னால் தொடர் வேலை நிறுத்​தம் செய்​ய​வும் முடிவு செய்​துள்​ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நடிகர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நடிகர்கள், கலைஞர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேலைநிறுத்தத்தை நடிகர் சங்கம் எப்போதும் ஆதரிக்காது என்றும், எங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட எந்தவொரு புகாருக்கும் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து இரு அமைப்பின் பிரதிநிதிகள் ஆலோசிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நடிகர் சங்கம், தமிழ்த் திரைத் துறையின் வளமான வருங்காலத்துக்காக ஒத்துழைப்பை நல்க ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Summary

Producers Council Strike on May 2: Actors Association Expresses Dissatisfaction

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.