/

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image

நிலநடுக்கம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 3:19 am

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் வடக்கு ஜப்பானின் ஒரு பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் உள்ள சிறிய நகரமான சரபெட்சுவில் இருந்து 18 கிலோமீட்டர் மேற்கே, 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அளவை 6.1 ரிக்டர் எனப் பதிவு செய்துள்ளது. இதனிடையே வரும் வாரத்தில் அப்பகுதியில் இதேபோன்று மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Summary

A magnitude 6.2 earthquake shook part of northern Japan early Monday, but no damage or casualties have been reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.