ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

வெனிவேசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து..

earthquakes hit Venezuela

தலைநகர் கராகஸில் இடிந்து விழுந்த கட்டடங்கள் - ஏபி

Published On :25 ஜூன் 2026, 10:19 am IST

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டதால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

முதலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் கராகஸில் இருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் மோரோன் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி சேதமடைந்தன. மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் சில நிமிடங்களில் பூமியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

7.5 Magnitude Two powerful earthquakes hit Venezuela

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.