வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 235 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவில் வியாழக்கிழமை (ஜூன் 25) நண்பகல் 12.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான அது, மேனே கிராண்டே நகருக்கு 24 கி.மீ. தொலைவிலும், தலைநகா் கராகஸுக்கு 600 கி.மீ. தொலைவிலும் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த மையம் தெரிவித்தது.
வெறும் 39 விநாடிகள் மட்டுமே ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களில் சுமார் 235 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கார்லஸ் அல்வராடோ கூறியுள்ளார். மேலும், 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெனிசுலா நிலநடுக்கம் - AP
அதுமட்டுமின்றி, நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
Summary
Venezuela health minister says around 235 people dead and 4,300 injured in catastrophic earthquakes.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்! 164 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! - இடைக்கால அதிபர் அறிவிப்பு!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!







