இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

இளநிலை நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

நீட் தேர்வு ஹால் டிக்கெட்.

Updated On :27 ஏப்ரல் 2026, 2:50 am

இளநிலை நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி https://neet.nta.nic.in இணையதளத்தில் தொடங்கி மாா்ச் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வு மையம், ஹால் டிக்கெட் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

Summary

NEET admit card 2026 has been released on the official website- neet.nta.nic.in. Get direct NEET UG hall ticket 206 download link here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.