இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தத்தால் விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன் பெறும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 27) தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
''இந்தியா-நியூசிலாந்து இடையிலான கூட்டு உறவில் இன்று ஒரு மைல்கல் தருணம்!
இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சிக் கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் புதுமையாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்குப் புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி, பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.
நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
India-New Zealand FTA deal Prime Minister Narendra Modi says will greatly benefit farmers, youth, MSMEs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏப்.27-இல் கையொப்பம்
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


