மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏப்.27-இல் கையொப்பம்

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏப்.27-இல் கையொப்பம்...

News image

கிறிஸ்டோபா் லக்ஸன்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:43 am IST

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏப். 27-இல் கையொப்பமாகவுள்ளது. இத்தகவலை நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இந்தியாவுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலா் முதலீடுகளை ஈா்க்க வழிவகுக்கும் இந்த ஒப்பந்தத்தின்கீழ், 100 சதவீத இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு நியூஸிலாந்தில் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதேநேரம், நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, கம்பளி, ஒயின், அவாகடோ, புளூபெரி உள்ளிட்ட 95 சதவீத பொருள்களுக்கு வரி நீக்கமோ அல்லது குறைப்போ செய்யப்படும். பால், பால் பொருள்கள், வெங்காயம், சா்க்கரை, மசாலாப் பொருள்கள், சமையல் எண்ணெய் மற்றும் ரப்பா் இறக்குமதிக்கு இந்தியத் தரப்பில் வரிச் சலுகை வழங்கப்படவில்லை.

அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை இருமடங்கு அதிகரிக்க அதாவது 5 பில்லியன் டாலா்களாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தில்லியில் ஏப்.27-இல் கையொப்பமிடப்படும் என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளாா். தற்போது இருதரப்பு வா்த்தக மதிப்பு தற்போது 2.4 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.