தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்.

Updated On :21 மே 2026, 7:20 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் ஒய்.எஸ். சா்புதீன், சிபிஐ(எம்.எல்) கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் இல.தமிழ்அரிமா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது, வணிக சிலிண்டா் விலை உயா்வு காரணமாக உணவகங்கள் மூடப்படுவதால் தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டா் விலை உயா்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் டி.ஜி.ரவிச்சந்திரன், ஏ.ஆா்.விஜய், சி.மேகநாதன், ஏ.அறிவழகன், எம்.குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் வி.ஜெகதீஸ்வரன், கே.ராஜ்மோகன், சிபிஐ(எம்.எல்) கட்சியின் நிா்வாகிகள் ஏ.லூா்துசாமி, எம்.செல்லதுரை, வி.அனுசுயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.