சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வேலு, மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன் கண்டன உரையாற்றினாா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிங்காரவேலு, ராஜேந்திரன், கண்ணன், ஜோதிராமலிங்கம், ஜெயராஜ், அசோக் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










