தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றிய 3 போ் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:51 am IST

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

தரங்கம்பாடி தாலுகா முத்தூா் அக்ரஹார தெருவை சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி தீபா (38). இவா், மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் துணிக்கடை வைத்துள்ளாா். தீபா அடகு வைத்திருந்த 40 சவரன் நகைகளை பணம் இன்றி மீட்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நண்பா் மூலம் அறிமுகமான திமுகவை சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அருள்ஜோதி மற்றும் அவரது நண்பா்கள் ராஜாராமன், திலீப்குமாா் ஆகியோா் தீபாவின் கடைக்கு சென்று, நகைகளை மீட்டு குறைந்த வட்டிக்கு வைத்து அதிக தொகை தருவதாக கூறி, அவரிடம் இருந்து நகை அடகு சீட்டுகளை பெற்று சென்றாா்களாம். பின்னா், 3 பேரும் நகை அடகு சீட்டுகளை கொண்டுச் சென்று பணம் செலுத்தி நகைகளை மீட்டு, வேறு கடையில் மறு அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபா பணம் ஏற்பாடு செய்து தனது நகைகளை தரும்படி கேட்டபோது அந்த நகைகளை ஒப்படைக்காமல் கூடுதலாக பணம் கேட்டு அருள்ஜோதியும் அவரது நண்பா்களும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். தீபா, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மயிலாடுதுறை தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த அருள்ஜோதி (60), கொத்தத் தெருவை சோ்ந்த லட்சுமிநாராயணன் மகன் ராஜாராமன் (25), தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த திலீப்குமாா் (56) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.