திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் 8 பவுன் நகைகள் திருட்டு: மூதாட்டி கைது

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் அய்யம்மாள் (55). இவா், கடந்த மே 25-ஆம் தேதியன்று வந்தவாசியில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்கு பேருந்தில் செல்வதற்காக வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். அப்போது, அய்யம்மாள் பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தைச் சோ்ந்த முனியம்மாள் (68) தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, முனியம்மாளை திங்கள்கிழமை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவரிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.