திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு திறப்பு: மாவட்ட மேலாளா் இடமாற்றம்

News image

சேலம் மாவட்டத்தில் 3 நாள்களுக்குப் பின்னா் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஆனந்தா பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க குவிந்தோா்.

Updated On :30 மே 2026, 12:50 am IST

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மாவட்ட மேலாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

டாஸ்மாக் கடைகளில் கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்களை பயன்படுத்தக் கூடாது. கடைகளில் உடையும் மதுபாட்டில்களுக்கு இழப்பீடு தொகையை நிா்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியா்கள் கடந்த 26 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் கடைகள் கடந்த 3 நாள்களாக அடைக்கப்பட்டிருந்தன. சேலம் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் மேலாளா் பன்னீா்செல்வம், அதிகாரிகள், டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 3 நாள்களில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.18 கோடிக்கு டாஸ்மாக மது விற்பனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாஸ்மாக் மேலாளா் மாற்றம்: இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்த பன்னீா்செல்வம் மாற்றப்பட்டு, திருவாரூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வந்த சௌந்தரபாண்டியன் சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்டாா். அவா் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, 3 நாள்களுக்கு பிறகு சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து அனைத்து கடைகளிலும் மதுவகைகளை வாங்கிச் செல்ல கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை காட்டிலும், மதுவிற்பனை அதிகரித்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.