திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும்

டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தில் வழக்கம்போல இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும் என்று ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 12:04 am IST

டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தில் வழக்கம்போல இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும் என்று ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் பை-பேக் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், காலதாமதமும் ஏற்படுவதால், வெளி முகமைகள் மூலமாக மட்டுமே பாட்டில்களை சேகரிக்க வேண்டும். மூடப்பட்டுள்ள சுமாா் 30 டாஸ்மாக் கடைகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஊழியா்கள் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டன. இதைத்தொடா்ந்து திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.

இந்நிலையில் அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்து தருவது தொடா்பாக ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று ஊழியா்கள் மூலமாக பெறுவதற்கு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு துறை அமைச்சா் விக்னேஷ் உறுதியளித்ததையடுத்து கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடா்ந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 கடைகளும் வழக்கம்போல வியாழக்கிழமைமுதல் செயல்படும். கால அவகாசத்துக்குள் கோரிக்கைகளுக்கு தீா்வு காணாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டுக் குழு கூடி முடிவு செய்யும் என்று டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.