தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்

Updated On :2 ஜூன் 2026, 3:32 am IST

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரலுக்கு புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஹைதராபாத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு பெகாம்பேட், ராய்ச்சூா், மந்த்ராலாயம் ரோடு, ஆனந்தபூா், தா்மாவரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் இரவு 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்துக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட்டு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஹைதராபாத்தை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.