தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

News image

ரயில்.

Updated On :24 மே 2026, 2:24 am IST

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி, தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து இயக்குகிறது.

அந்த வகையில், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட போத்தனூரில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மேற்குவங்கம் மாநிலம், கராக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதன்படி, போத்தனூா் - கராக்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த ரயில், வரும் 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைதோறும்) இயக்கப்படும். போத்தனூரில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக திங்கள்கிழமை மதியம் 12.30 கராக்பூருக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், கராக்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்) இயக்கப்படும். கராக்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, சேலம் வழியாக ஈரோடுக்கு புதன்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.